
உங்கள் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரத் தொழில் நிபுணர்கள் வழங்கும் பணிக்குத்திரும்புவோர்க்கான தகவல்.
விதிமுறைகளை மறவாமல் இருப்போம்
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை தளர்த்தப்பட்ட இவ்வேளையில், மலேசியர்கள் அனைவரும் தங்கள்செயல்களில் கவனமாக இருக்கவேண்டும். வீட்டிலும் பணியிடத்திலும் சுயதூய்மையைப் பேணுவது,வெளியாட்களிடம் ஒரு பாதுகாப்பான இடைவெளியை நிறுவுவது போன்ற சில ஆலோசனைகளைநினைவில் கொள்ளுங்கள்.

மற்றவர்களிடமிருந்து தள்ளியிருங்கள்
வெளியிடங்களிலும், வரிசைகளிலும், நீங்கள் பணிபுரியும் இடங்களிலும் மற்றவர்களிடமிருந்து ஒருமீட்டருக்கு அதிகமான இடைவெளியில் இருங்கள், முகக்கவசத்தை அணிந்திருங்கள். மற்றவர்களுடன்நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க, மின்தூக்கியின் பயன்பாட்டை முடிந்தவரைக் குறைத்துக்கொண்டு,படிகளைப் பயன்படுத்துங்கள்.

உடல்நலம் குன்றும்போது, வீட்டிலேயே இருங்கள்
உடல்நலக்குறைவு ஏற்பட்டால், உங்கள் மேலாளர் அல்லது உடனடி மேற்பார்வையாளரிடம் தகவல்தெரிவித்து, வீட்டிலேயே இருங்கள். அவசியமானால், மருத்துவ சேவையைப் பெறுவதற்கு அருகிலுள்ளமருத்துவ நிலையத்திற்குச் செல்லுங்கள் அல்லது சுகாதார அமைச்சை அணுகுங்கள்.

பொதுக்கழிவறைகளைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள்
பொதுக்கழிவறைகளைப் பயன்படுத்தும்போது, நோய் தொற்றுக்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளதால்எப்போதும் முறையான தூய்மையைப் பேணுங்கள். கழிவறையின் கதவின் பிடியை நுழையும் முன்பும்வெளியேறும் போதும் சுத்தப்படுத்துங்கள். மிக முக்கியமாக, உங்கள் கைகளைச் சோப்பைக் கொண்டுநன்றாக கழுவுங்கள்.

சகபணியாளர்களுடன் ஒன்றுகூடுவதைத் தவிருங்கள்
முடிந்தவரையில் பணி சம்பந்தமான ஒன்றுகூடல், சந்திப்பு கூட்டங்களைப் பொதுவான இடங்களில்நடத்துவதைத் தவிருங்கள். இயலாதபோது, ஒரு மீட்டருக்கு அதிகமாக இடைவெளியைப் பின்பற்றுங்கள்.அவசிய தேவைகளன்றி, மற்ற நேரங்களில் அலுவலக பொருட்களையும் உபகரணங்களையும் பகிர்வதைக்குறைத்துக் கொள்ளுங்கள். பணி நிமித்தமாகவோ வேறு காரணங்களுகாகவோ நெருங்கி பழகுவதைத்தவிருங்கள்.

வீடு திரும்பிய பிறகு, உங்கள் குடும்பத்தாரின் பாதுகாப்பை நிலைநாட்டுங்கள்
பணி முடிந்து வீடு திரும்பும்போது, வீட்டிலுள்ள பொருட்களைத் தொடுவதையும், குடும்பஉறுப்பினர்களோடு நெருங்கி உறவாடுவதையும் தவிருங்கள். உடனடியாக குளித்து முடித்து,பணியாடைகளைச் சோப்பு கலந்த நீரில் ஊறவைத்து துவைத்துவிடுங்கள்.
You may now download the visuals for different languages here.