ஒரு புதிய இயல்புநிலையை எதிர்கொள்ள, மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார தொழில் நிபுணர்கள் வழங்கும் தகவல்
நாளைய நன்மைக்காக, இன்று பொறுமையைக் கடைப்பிடிப்போம்
நடமாட்ட கட்டுப்பாடு ஆணை நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்தாலும், நமது கலாச்சார கூறுகளைப் பாதிக்கவில்லை. இந்த முக்கியமான காலக்கட்டத்தில் அனைத்து மலேசியர்களும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஒரு புதிய இயல்புநிலையை எதிர்கொள்ளவும் ஒருமைப்பாட்டு உணர்வுக்குப் புத்துயிர் அளிக்கவும் உங்களின் உதவிகளை அதிகரியுங்கள், விரயங்களைக் குறையுங்கள்.
நமது நோக்கம் ஒன்றே
நடமாட்ட கட்டுப்பாடு ஆணை நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்தாலும், நமது கலாச்சார கூறுகளைப் பாதிக்கவில்லை. அன்றாட தொழுகைகள் வீட்டிலேயே தொடரும், இரமலான் மாத சிறப்புக்களை அனைவரும் சேர்ந்தே இன்புறலாம். உங்கள் குடும்பத்தாரோடு வீட்டில் பாதுகாப்பாக இருந்துக்கொண்டே நோன்பு துறக்கலாம், நெருங்கிய சொந்தங்களை இணையம் வழி தொடர்பு கொள்ளலாம்.
மலேசியர்கள் அனைவரும் உங்களோடு இணைந்துள்ளோம்
நடமாட்ட கட்டுப்பாடு வேளையில், மலேசியர்கள் கொண்டாடிய தமிழ் புத்தாண்டு, புனித வாரம், கிங் மிங், வைசாக்கி, விஷு ஆகிய பண்டிகைகள் வழக்கத்துக்கு மாறாக இருந்தாலும் உணர்வுகளில் மாற்றமில்லை. அது போலவே, இந்த காலக்கட்டத்தில், விசாக தினம், நோன்புப் பெருநாள் ஆகியவற்றைக் கொண்டாடுவதற்குப் புதிய அணுகுமுறைகளைக் கண்டறிய சமயத் தலைவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இது எதிரொலிப்பதற்கானத் தருணம்
நீங்கள் பின்பற்றும் சமயநெறிகளின் உள்ளார்ந்த கருத்துக்களைக் கண்டடையக்கூடிய அரிய தருணமிது. இந்த கொள்ளை நோயின்போது, நமது சமயநம்பிக்கை இன்னும் வலுத்து, சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும் நம்மைச் சார்ந்தோரை பாதுகாக்கவும் வழிவகுக்கும். துன்பமான தருணத்தில் நாம் ஆற்றும் எதிரொலிப்பு, துன்பத்தைத் தாங்கும் ஆற்றலை நமக்கு அளிக்கிறது.
பகிர்தல் அதிகமாகட்டும்; விரயம் குறையட்டும்.
உங்களிடம் தேவைக்கு அதிகமாக இருந்தால், அதனை வேண்டுவோருக்குப் பகிர்ந்தளியுங்கள். பீதியினால் அதிக பொருட்களை வாங்கி பதுக்கி வைக்காதீர்கள். உங்களுக்குத் தேவையானதை மட்டுமே வாங்குங்கள். அது, அடிப்படை பொருள்களை நாடும் முன்னிலை பணியாளர்கள், ஆபத்தானச் சூழலில் தினமும் பணியாற்றும் வீரர்கள் மீதான நம் அக்கறையைப் புலப்படுத்தும். .
ஒருமைப்பாட்டு உணர்வை ஓங்கச் செய்வோம்
இந்த நச்சுயிரி ஏழை பணக்காரன் என பாகுபாடு பார்ப்பதில்லை. இதற்கு நாடு, இனம், சமயம் என்ற வேறுபாடு இல்லை.. மற்றவர்களுடன் அன்போடும் சகிப்புத்தன்மையோடும் இருப்பதுதான் இதிலிருந்து மீளும் வழி. உங்கள் வாழ்க்கைமுறையைக் காட்டிலும் வசதி குறைந்தோர் மீது அக்கறைக்கொள்ளுங்கள். இதில் நாம் அனைவருமே இணைந்திருக்கிறோம்.
பொறுத்திருங்கள், நாளைய நன்மையை எண்ணி இன்று பொறுமையாய் இருங்கள்.






