உங்கள் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரத் தொழில் நிபுணர்களின் தகவல் முன்னோக்கி செல்கையில்
புதிய பழக்க வழக்கங்களோடு தொடர்ந்திருப்போம்
சபாஷ் மலேசியர்களே! ஒரு மாற்றத்தை உருவாக்கியதற்கு நன்றி. கோவிட்-19 ஐ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததில் உங்கள் அனைவரின் பங்கும் அடங்கியுள்ளது. இருந்தபோதிலும், இந்த கொள்ளைநோய் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதனைக் கடந்து முன்னோக்கி செல்கையில், நாம் பெற்ற
அனுபவங்களை மறக்கக்கூடாது. நாம் இயல்பான நிலைக்குத் திரும்ப போவதில்லை, மாறாக, ஒரு புதிய இயல்புநிலையை ஒன்றிணைந்து உருவாக்குவோம்.
புதிய பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம்
உங்கள் கைகளை அடிக்கடி சோப்பினால் கழுவுங்கள், முகத்தைத் தொட முனையாதீர்கள், ஆல்கஹோல் கொண்டு தயாரிக்கப்பட்ட கை சுத்திகரிப்பு திரவத்தை உங்களோடு வைத்திருங்கள். பொது இடங்களில் முகக்கவசத்தை அணிந்திருங்கள்.
மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான இடைவெளியைப் பேணுங்கள்
நாம் இப்போது பொது இடங்களான பேரங்காடிகள், உணவகங்கள் மற்றும் விற்பனைக்கூடங்களுக்கு செல்லமுடிந்தாலும், நெருக்கடியான, வரையறுக்கப்பட்ட மூடிய இடங்களையும் அணுக்கமான உரையாடல்களையும் தவிருங்கள். எப்போதும், மற்றவர்களிடமிருந்து குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியில் இருங்கள்.
ஒருவர் மற்றொருவர் மீது அக்கறைக் கொள்வோம்.
உங்கள் அன்பிற்குரியவர்களையும், அண்டை அயலாரையும் அவ்வபோது கவனியுங்கள், ஒருவர் மற்றொருவருடன் அனுசரணையாய் இருங்கள். ஆதரவான சமூக சூழல், நம்மை புதிய இயல்பு நிலைக்கு உரியமுறையில் கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.
நம்பகமான தகவல்களைப் பெறுங்கள்
கோவிட்-19 செய்திகளைப் வாசிக்கும்போதும் அல்லது பகிரும்போதும், அதன் மூலங்களை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நம்பகமான செய்திகளை மலேசிய சுகாதார அமைச்சு, உலக சுகாதார அமைப்பு மற்றும் மலேசிய சுகாதார கூட்டமைப்பு உறுப்பிய அமைப்புகள் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம். தகவல்களின் உண்மைவிவரங்களை www.sebenarnya.my. இணையதள வழியாகவும் தெரிந்துக் கொள்ளலாம்.
You may now download the visuals for different languages here.






