உங்கள் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரத் தொழில் நிபுணர்களின் தகவல்
பாதுகாப்பாக இருங்கள் – இது இன்னும் ஓயவில்லை!
சிறார் முதல் முதியோர் வரை, அனைத்து வயதினரும் நோய் தொற்றினால்
பீடிக்கப்படலாம்.
மூடிய, வரையறுக்கபட்ட மற்றும் கும்பலான இடங்களைத் தவிருங்கள்.
மூடிய, வரையறுக்கபட்ட மற்றும் அதிகமானோர் கூடும் இடங்கள், நோய்
தொற்றுக்கான சாத்தியங்களை அதிகரிக்கும். இவ்விடங்களில் அமைந்துள்ள குறைவான காற்றோட்டத்தால், நச்சுயிரியைத் தாங்கி நிற்கும் திவலைகள் அடைப்பட்டிருக்கும்.
- முடிந்தவரையில் இம்மாதிரியான இடங்களில் புழங்குவதைத் தவிருங்கள்
வெளியே செல்லும் போது, முகக்கவசத்தை அணியுங்கள்
பொது இடங்களுக்குச் செல்ல நேரிட்டால், முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முகக்கவசம், உங்களையும் மற்றவர்களையும் நச்சுயிரியைத் தாங்கி நிற்கும் திவலைகளிடமிருந்து பாதுகாக்கும்.
பொதுவான பகுதிகளைத் தொட முனையாதீர்கள்.
உங்கள் வெறுங்கைகளால் மின் தூக்கியின் விசைகள், பேனா மற்றும் படிகளின் கைப்பிடி போன்ற பொதுவான முகப்புகளைத் தொடுவதைத் தவிருங்கள். இதனைத் தவிர்க்கமுடியாத பட்சத்தில், உங்கள் கைகளை உடனடியாக சோப்பு அல்லது ஆல்கஹாலைக் கொண்ட சுத்திகரிப்பு திரவத்தால் தூய்மைப் படுத்துங்கள். உங்கள் முகத்தைத் தொட முற்படாதீர்கள்.
தொடர்பு கொள்வதற்கு வேண்டிய, துல்லியமான சுயவிவரங்களை நல்குங்கள்
கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் நுழையும் போது, உங்களின் துல்லியமான சுயவிவரங்களை நல்குங்கள். இவ்விடங்களில் புழங்கிய நபர்களில் எவருக்கேனும் கோவிட்-19 உறுதிப்படுத்தப்பட்டால், சுகாதார அமைச்சு உங்களைத் தொடர்புக் கொள்ள ஏதுவாக இருக்கும். இந்த நோய் தடுப்பு நடவடிக்கையை மேலும் செயலூக்கப்படுத்த, உங்களின் பங்கை ஆற்றுங்கள்!
உங்கள் முகக்கவசத்தைப் பாதுகாப்பாக நீக்குங்கள்
வீட்டைச் சென்றடைந்தவுடன், உங்களது ஒற்றைப்பயன்பாட்டு முகக்கவசத்தைக் குப்பையில் வீசுங்கள். துணியால் தயாரிக்கப்பட்ட முக்கவசத்தை சோப்பினாலும் நீராலும் துவைத்து விடுங்கள்.
பாதுகாப்பற்ற நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் முறையிடுங்கள்
பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றாத நபர்களைக் காண நேரிட்டால், அவ்விட மேலாளர்கள், பாதுகாவலர்கள் அல்லது காவல் துறையிடம் தகவல் தாருங்கள். கோவிட்-19-ஐ எதிர்கொள்ள சமுகத்தில் ஒத்துழைப்பு அவசியம். எனவே நாம் இதில் ஒன்றிணைந்திருப்போம்.
You may now download the visuals for different languages here.






