உங்களுடைய மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் தொழில் நிபுணர்களிடமிருந்து
கோவிட் -19 கொள்ளைநோயின் போது, முதியோர்கள், நாள்ப்பட்ட உடல்நலகுறைகள்உடையவர்கள் மற்றும் உடல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான இயல்பான மருத்துவசேவைகள்தடங்கலாக சாத்தியமுள்ளது.
பரிந்துரையின்படி உங்கள் மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள்
உங்களுக்கு நாள்ப்பட்ட உடல்நலகுறைகள் இருக்குமாயின், அதற்கான மருந்துகள் தீரும் முன்பேபெற்றுக்கொள்ள மறவாதீர்கள். இந்த நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையின் போது, சுகாதாரஅமைச்சு உங்களுக்குத் தேவையான மருந்துகளைப் போஸ் மலேசியா, டிரைவ் த்ரூ மற்றும்லாக்கர்4யூ போன்ற கூடுதல் சேவைகளின் வழி வழங்குகிறது. மேலதிக உதவிகளுக்கு உள்ளூர்சுகாதார சிகிச்சை நிலையங்கள் அல்லது தேசிய மருந்தியல் அழைப்பு மையத்தை 1800-88-6722-எண்களின் வாயிலாக அழைக்கவும். அல்லது, உங்களால் இயலும்போதெல்லாம், இவர்களுக்குதேவையான மருந்துகள் கிட்டும்படி உதவிகள் புரியலாம்.
அவசர எண்களைத் தயாராக வைத்திருங்கள்
999 / மருத்துவ அவசரஊர்தியை அழைத்தல்
மருத்துவ அவசரநிலையின் போது, 999 எண்களை அழையுங்கள். உங்கள் குடும்பத்தினரையோஅல்லது நெருங்கிய உறவினர்களையோ தொடர்பு கொள்ள உங்களின் நம்பகரமானஅண்டைவீட்டாரை நாடுங்கள். முடிந்தவரையில், உங்கள் அண்டைவீட்டாரிடம் முக்கியமானதொடர்பு எண்கள் முன்பே இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது போன்றசூழ்நிலைகளில், ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது.
தற்போதைக்குத் தள்ளியிருப்பதே நீங்கள் காட்டும் அன்பாகும்
இந்த நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையின் போது, நமது அன்புக்குரியவர்களின் பிரிவை மிகவும்உணர நேரிடலாம். இருந்தபோதிலும், தற்காலிகமாக தள்ளி இருப்பதே அவர்களின்பால் நாம்கொண்டிருக்கும் அக்கறையைக் எடுத்துரைக்கும். உங்கள் குடும்பத்தினர்களை, முதியோர்களை,நாள்ப்பட்ட உடல்நலகுறைகள் உடையவர்களை அவசரதேவைக்கு அப்பாற்பட்டு சந்திப்பதைத்தவிருங்கள். இதற்கு மாற்றாக தொலைபேசி, காணொளி உரையாடல், அல்லது சமூக ஊடகங்கள்மூலம் தொடர்புக் கொண்டு, அவர்களின் ஆரோக்கியத்திற்கு அரணாக இருங்கள்.
உங்கள் பராமரிப்பாளர் மீது அக்கறை காட்டுங்கள்
பராமரிப்பு பணியாளர்களுக்கு இது ஒரு கடினமான காலமாக இருக்கலாம். அவர்கள் மனஅழுத்ததையும் அயற்சியையும் கொண்டிருக்கலாம். அவர்களிடம் கனிவாக இருங்கள். அவர்களின்சேவைகளைப் பாராட்டி, உங்கள் உதவிக்கரங்களை இயன்றவேளைகளில் நீட்டுங்கள்.அவர்களுக்கு உணவைத் தருவித்து தேவையான பொருட்களைப் பெற உதவுங்கள். அவர்கள்திடமாக இருந்தால்தான், நீங்கள் நலமாய் வாழமுடியும்.
You may now download the visuals for different languages here.