உங்கள் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரத் தொழில் நிபுணர்கள் வழங்கும் தகவல்
உங்கள் நலனையும் உங்கள் சமூகத்தின் பாதுகாப்பையும் உறுதிசெய்யுங்கள்
நச்சுயிரியை ஒருவர் மற்றொருவர்க்குப் பரப்ப வேண்டாம்.
பாதுகாப்பாகவும் விழிப்புடனும் இருங்கள்
வெளியிடங்களில் இருக்கும்போது உங்கள் மூக்கையும் வாயையும் இறுக்கமாக மூடக்கூடியமுகக்கவசத்தை அணிந்திருங்கள். வீட்டில் சுயமாக துணியால் செய்யப்படும் முகக்கவசத்தை பயன்படுத்துவதும் ஏற்புடையதே!
உங்கள் கைகளை சோப்பு மற்றும் நீர் கொண்டு கழுவவும். சோப்பு நச்சுயிரியை கொல்லும் தன்மை உடையது.
சொந்த ஊருக்குப் பயணிப்பதை இயன்றவரை தவிர்க்கவும். அவசியம் எனின், காவல் அதிகாரியிடமிருந்து அனுமதி பெற்றபின் பயணியுங்கள்.
உங்கள் ஊருக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அங்கு சென்றடைந்தவுடன், குடும்ப உறுப்பினர்களையும் பொருள்களையும் தொடுவதற்குமுன் முதலில் உங்களை சோப்பு மற்றும் நீரால் சுத்தம் செய்துக்கொள்ளவும். அன்பிற்குரியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் குடும்பத்தின் நலனை பாதுகாக்கவும்
- நச்ச்சுயிரி பரவாமல் தடுப்பதற்கு, ஒரே வீட்டில் வசிப்பவர்கள் மட்டுமே கூடுங்கள்
- உங்கள் வீட்டில் வசிக்காதவர்களிடமிருந்து எப்போதும் ஒரு மீட்டருக்கு அதிகமான இடைவெளியில் இருங்கள்.
- சிறார் வெளியே விளையாடிய பிறகு, வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு சோப்பு மற்றும் நீரால் சுத்தம் செய்துக்கொள்வதை உறுதிப்படுத்துங்கள்.
- முதிய உறவினர்களையும், நீண்டகால உடல்நலக்குறைவு உள்ளவர்களையும் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கவும்.
எவருக்கேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால்
- அருகிலுள்ள அரசாங்க மருத்துவமனை அல்லது மருத்துவ நிலையங்களுக்குச் செல்லுங்கள்
- நீங்கள் நோய்யுற்றவருடன் செல்ல வேண்டுமாயின், உங்கள் பயணத்தின் போது இருவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிசெய்யுங்கள். அந்நபருடன் தொடர்பு கொண்ட பிறகு சோப்பு மற்றும் நீரால் உங்களை சுத்தம் செய்துக்கொள்ளுங்கள்
- நோய்யுற்றவரிடம் இருந்து மற்றவர்கள் ஒரு மீட்டருக்கும் அதிகமான இடைவெளியைக் கொண்டிருப்பது அவசியம்.
-
எவருக்கேனும் உடல்நலம் மிகவும் கவலைக்குரியதாக இருந்தால், உடனடியாக 999 எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்.
You may now download the visuals for different languages here.






